மேற்குவங்கம்: மக்களின் செல்பி ஆர்வத்துக்கு மலைப் பாம்பு பலி

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் பாபுஜியோர் கிராம மக்கள் அப்பகுதி ஆற்றில் 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதனுடன் விதவிதமாக செல்போனில் செல்பி எடுத்தனர்.

இதற்காக பாம்பினை மோசமாக கையாளப்பட்டது. இதனால் மலைப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிலர் பாம்பின் கழுத்தை பிடித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியானது. தகவலறிந்த வனத்துறையினர் புகைப்படங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You may have missed