கேரளா வெள்ள பாதிப்புக்கு கத்தார் 50 லட்சம் டாலர் நிதியுதவி

டோஹா:

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சுமார் 400 பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஆயிரகணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவுக்கு இந்தியாவில் பல மாநிலங்கள் மட்டுமின்றி உலக நாடுகளிடம் இருந்து நிதியுதவி குவித்து வருகிறது. இந்த வகையில் கேரளா வெள்ள பாதிப்புக்கு 50 லட்சம் டாலர் நிதியுதவியை கத்தார் மன்னா ஷேக் தமீம் பில் ஹாமத் அல் தானி அறிவித்துள்ளார். இந்த நிதி வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு மீண்டும் வீடு கட்ட பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரளா வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மன்னர், துணை மன்னர் ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர். அந்நாட்டு உள்துறை அமைச்சர் நசீர் பில் கலிபாவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.