ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி சுற்றில் ஜப்பான் அணியை வீழ்த்தி கத்தார் அணி சாம்பியன் பட்டத்தை வென்றத்.

qatar

ஆசிய கால்பந்து போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்தது. வழக்கமாக 16 அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்த தொடரில் இம்முறை 24 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றுகள் முடிந்தநிலையில் நாக்-அவுட் போட்டியில் ஈரான், ஜப்பான், கத்தார், யுஏஇ அணிகள் வெற்றிப்பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

அரையிறுதி சுற்றின் முதல் நாள் போட்டியில் ஈரான் மற்றும் ஜப்பான் அணிகள் மோதியது. இதில் ஈரானை வீழ்த்தி ஜப்பான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோன்று, மற்றுமொரு அரையிறுதி ஆடத்தில் கத்தார் மற்றும் யுஏஇ அணிகள் மோதின. இதில் கத்தார் அணி வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறின.

இதனை தொடர்ந்து அபுதாபியில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கத்தார் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே சிறாப்பாக செயல்பட்டகத்தார் அணியின் அலி 12வது நிமிடத்திலும், ஹதீம் 27வது நிமிடத்திலும், அபிப் 83வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். `இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பான் அணியின் மினாமினோ ஒரு கோல் அடித்தார். இறுதி வரை ஜப்பான் அணி மோல் அடிக்க முயன்றும் அவை தோல்வியில் முடிந்தன.

இறுதியாக கத்தார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து ஆசியன் கோப்பையையும் கத்தார் அணி வென்றது.