தவறான செய்தி – தவிக்கும் கத்தார்

த்தார்

ரு தவறான செய்தியின் விளைவால் பெஹ்ரைன், சவுதி அரேபியா, யுஏஇ மற்றும் எகிப்து நாடுகள், கத்தார் நாட்டுடன் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்து கத்தார் இப்போது தனித்து விடப்பட்டது

கடந்த மே மாதம் 23 அன்று கத்தார் நாட்டின் அரசாங்க செய்தி நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது.

கத்தார் ஷேக் அல் தானி, ஈரான் தான் இஸ்லாமிய நாடுகளில் முக்கிய நாடு என்பதை யாராலும் மறுக்க முடியாது எனவும், அமெரிக்க அதிபர் ஈரான் நாட்டை மற்ற அரபு நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்பது அறிவில்லாத அறிக்கை எனவும் விமர்சித்ததாக அச்செய்தி சொன்னது

மேலும் அச்செய்தியில் கத்தார், தன் முழு ஆதரவையும் ஈரான் நாட்டுக்கு அளிப்பதாக .தெரிவித்ததாக கூறப்பட்டது

அடுத்த நாள் கத்தார் நாட்டின் அரசு அறிக்கையில் அரசாங்க செய்தி நிறுவனம் ‘ஹேக்’ செய்யப்பட்டதென்றும்,அனைத்து செய்திகளும் தவறானவை எனவும் தெரிவிக்கப்பட்டது.  அரசுச்செய்திதுறையின் ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டதாகவும், ஆகவே அதில் கத்தாரை மற்ற அரபுநாடுகள் கீழே தள்ள முயல்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக வந்த தகவல்களும் பொய் என கூறப்பட்டது

ஆனால் அதற்குள்ளாகவே வளைகுடா நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இவை பரபரப்பான செய்திகள் ஆகி இருந்தன.  அனைத்து செய்தி ஊடகங்களிலும் இவை பரப்பபட்டன.  கத்தாரின் மறுப்பை எந்த ஒரு அரபு அரசும் நம்பவில்லை.

இது போல ஹேக் செய்வது ஏற்கனவே பலமுறை நடைபெற்றுள்ளது.  போன வருடம் கத்தார் தேசிய வங்கியின் முக்கிய கணக்கு விவரங்கள் ஹேக்கர்களால் வெளியிடப் பட்டது.   இதில் ஆட்சியாளர்கள் பலரின் விவரங்களும் அடங்கும்.  இதே போல் 2012ல் ஹேக்கர்கள் ஒரு வைரஸை பரப்பி கத்தாரின் கேஸ் கம்பெனியான ராஸ்கேஸ் என்னும் நிறுவனத்தின் அனைத்துக் கணினிகளையும் முடக்கி, அதில் பதியப்பட்டிருந்த அத்தனை பதிவுகளும் காணாமல் போயின

இவைகள் எல்லாம் கத்தார் நாட்டினால் குறிப்பிடப்பட்டு ஒரு அறிக்கை வெளியானது.   அதுவும் மற்ற அரபு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

மற்ற அரபு நாடுகள் தங்கள் நாட்டை அமுக்கச் செய்யும் சதிகள் இவை என கத்தார் குற்றம் சாட்டியுள்ளது

கத்தார் நாட்டுக்கு இந்த உறவு முறிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

கத்தார் நாட்டின் மேல் பறந்து சென்றுக் கொண்டிருந்த பல நாட்டு விமானங்களும் இப்போது சுற்றிச் செல்கின்றன.

கத்தார் வாழ் இந்தியர்களின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறி ஆனது.  அவர்களுக்கு எதுவும் பாதிப்பிருக்காது என அரசு உத்திரவாதம் அளித்த போதும் அங்குள்ள இந்தியர்கள் இன்னும் அதில் நம்பிக்கையின்றி இருக்கின்றனர்.

இந்தியாவில் கச்சா எண்ணை தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக சிலரும்,  இல்லையென சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

பொய் செய்தி ஒன்றினால் பேராபத்து ஏதும் நிகழுமோ என்பதே தற்போதைய அச்சம்