தோஹா

கத்தாருக்கு சவுதியில் இருந்து பால் மற்றும் பாலின் பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பசுக்களை இறக்குமதி செய்து சவுதிக்கு பதிலடி கொடுக்க கத்தார் அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜூன் 5 முதல் கத்தாருக்கு அனைத்து பொருட்களும் ஏற்றுமதி செய்வதை அண்டை நாடுகள் நிறுத்திவிட்டன.

கத்தாருக்கு பால் போன்ற பொருட்கள் பெருமளவில் சவுதி அரேபியாவின் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

சவுதி அரேபியா தற்போது அந்த சப்ளைகளை முழுவதுமாக நிறுத்தி விட்டது.

இதனால் பாலும் மற்றும் பாலிலிருந்து உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்களும் கத்தாரில் கிடைப்பது அரிதாகி விட்டது.

இதை சமாளிக்க கத்தார் அரசு எல்லாப் பொருட்களும் தடையின்றி கிடைக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கி விட்டது.

முதல் கட்டமாக துருக்கியில் இருந்து பாலின் பொருட்களும், ஈரானில் இருந்து காய்கறிகளும் இறக்குமதி செய்யப் படுகின்றன.

இந்நிலையில் கத்தார் நாட்டில் பசுக்களை இறக்குமதி செய்து உள்நாட்டுப் பால் வளத்தை பெருக்க கத்தார் அரசு திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, மற்றும் அமெரிக்காவிலிருந்து பசுக்களை இறக்குமதி செய்ய பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

கடல் வழியாக பசுக்களை இறக்குமதி செய்ய முதலில் திட்டமிட்டிருந்ததை தற்போது கத்தார் அரசு மாற்றிக்கொண்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் தனது விமானங்களில் 60 விமானங்களில் இந்தப் பசுக்களை கொண்டு செல்ல தயாராக உள்ளது.

இந்த மாத இறுதியில் உள்நாட்டு பால் உற்பத்தி ஆரம்பித்து, வரும் ஒன்றாம் தேதிக்குள் நாட்டின் பால் தேவையில் 1/3 கிடைக்க ஆரம்பிக்கும்.

வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முழுத்தேவையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விடும்.

மேற்கண்ட தகவலை கத்தார் நாட்டின் அல் காயத் தெரிவுத்துள்ளார்.