வெள்ளப்பாதிப்ப்பு: கேரளாவுக்கு ரூ.34.89 கோடி நிதி வழங்கும் கத்தார்

திருவனந்தபுரம்:

வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலத்துக்கு கத்தார் நாடு  ரூ.34.89 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கேரள மக்கள் அதிகம்பேர் பணயாற்றும் நாடுகளில் ஒன்று கத்தார் நாடு. இந்த நாட்டு அரசாங்கம், கேரள மாநில வெள்ளப்பாதிப்புக்காக  ரூ.34.89 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளது.

வரலாறு காணாத  கன மழை காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக கேரள மாநிலம் அல்லோலப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியும், பல இடங் களில் நிலச்சரி மற்றும் சாலைகள், சிறிய பாலங்கள் உடைந்து நொறுங்கியதால் போக்கு வரத்தும் அடியோடு முடங்கியது. மாநிலத்தில் பல இடங்களில் மின்சாரம் தடை பட்டது. , உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கி கேரளா தவித்துவருகிறது.

இதன் காரணமாக பல ஊர்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தனர். அவர்களை ராணுவத்தினரும், தேசிய மீட்பு படையினரும் காப்பாற்றி  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவுபொருட்கள்  கொண்டு சென்று சேர்க்கும் பணியில் 20 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு உள்பட பல மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பல தனியார் அமைப்புகள் உள்பட பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில கேரள மாநில மக்கள் அதிகம் வசிக்கும் கத்தார் நாடு, வெள்ளத்தால் பாதித்த மக்களுக்காக  சுமார் ரூ.34.89 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.