14 நாள்  தனிமை…  ’’செஸ்’ஆனந்த்தைத் துரத்தும் நெருக்கடி ..

14 நாள்  தனிமை…  ’’செஸ்’ஆனந்த்தைத் துரத்தும் நெருக்கடி ..

சில செஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ‘செஸ்’ ஆனந்த கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றிருந்தார்.

கொரோனா காரணமாக அந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. எனினும் , உலகளாவிய ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், 3 மாதங்களுக்கும் மேலாக ஆனந்த் ஜெர்மனியில் முடங்கிக் கிடந்தார்.

அரசாங்கம் நிர்ப்பந்தம் செய்யும் முன்னரே, அவர் ஜெர்மனியில், தன்னை சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.

இப்போது விமான போக்குவரத்து ஓரளவு சீரடைந்துள்ள நிலையில், ஆனந்த் ஜெர்மனியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம்  புறப்பட்டு இன்று மாலை பெங்களூரு வருகிறார்.

அரசாங்க அறிவுறுத்தலுக்கு இணங்க,பெங்களூரூவில் 14 நாள்  அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்கிறார்.

அதன் பின் ஆனந்த் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்