மீரட்

துபாயில் இருந்து திரும்பிய ஒருவருக்கு உபியில் நேர்ந்துள்ள கொடூரம் குறித்த பதிவு

மாதிரி புகைப்படம்

துபாயில் இருந்து உ.பி.மாநிலம் மீரட் திரும்பிய, ஒருவரை, கொரோனாவில் இருந்து தனிமைப் படுத்தும் விதமாக  அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் வைத்துள்ளனர்.

அவருடன் வேறு சிலரும் அங்குத் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

நால்வரும் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர்.

கழிப்பறை குழாய்களில் இருந்து, தங்களுக்கு  தரப்பட்டுள்ள, பாட்டிகளில் தண்ணீர் பிடித்துக் கொள்ளுமாறு அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் பணித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துபாய் ’’ரிட்டர்ன்’’ நோயாளி, பிரதமருக்கு டிவிட்டர் மூலம், இந்த குரூரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு நீரழிவு நோயாளியும் கூட.

அவருக்கு சுமார் 20 மணி நேரமாக உணவும் வழங்கப்படவில்லையாம்.

நீண்ட நேரம் நீரழிவு நோயாளிக்கு உணவு அளிக்காவிட்டால் அவர் உயிருக்கே உலை வைத்து  விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நோயாளி துபாயில் உள்ள உலகப்புகழ் பெற்ற நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தவர் என்பது, சோகமான, கூடுதல் தகவல்.

ஊருக்கே உணவு அளித்தவருக்கு, சொந்த ஊரில் சாப்பாடு கிடைக்கவில்லை.

– ஏழுமலை வெங்கடேசன்