உ.பி.யில் நர்சுகளை வதைத்த  கொரோனா ‘குரூரர்கள்’..

--

உ.பி.யில் நர்சுகளை வதைத்த  கொரோனா ‘குரூரர்கள்’..


டெல்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவர்கள், பல்வேறு இடங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்ற 6 பேர் உ.பி.மாநிலம் காசியாபாத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்ற பெண்  நர்சுகளுக்கு ஏற்பட்ட அனுபவம் – பதை பதைக்கச் செய்யும் ரகம்.

அருவருப்பான வார்த்தைகளால் நர்சுகளை அந்த நபர்கள் திட்டியுள்ளனர்.

ஆபாச பாடல்கள் பாடியும், மோசமான அங்க அசைவுகள் செய்தும் அவர்கள் திடுக்கிடச் செய்துள்ளனர்.

‘’பீடியும், சிகரெட்டும் தங்களுக்கு உடனடியாக வேண்டும்’ என்று அடம் பிடித்த ஆசாமிகள்- ஒரு கட்டத்தில் ஆடைகளைக் களைந்து .எல்லை மீறியுள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்து போன நர்சுகள் இது குறித்து டாக்டர்களிடம் புகார் செய்துள்ளனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவீந்தர் சிங், உ.பி.மாநில அரசின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்த 6 ஆசாமிகள் மீதும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

’அந்த ஆசாமிகள் மனித குலத்தின் விரோதிகள்’’ எனக் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார், மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்.

– ஏழுமலை வெங்கடேசன்