காலாண்டு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை: தமிழக கல்வித்துறையின் அவலம்

சென்னை:

மிழகத்தில் காலாண்டு தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில் பல பாடங்களுக்கு இன்னும்  புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில்  கடந்த ஜூன் மாதம் முதலே பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கி உள்ள நிலையில், 3 மாதங்கள் நிறைவடைந்தும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் கொடுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் மொழிப்பாடங்கள் தவிர பிறமொழிப் பாடங்கன பிரெஞ்சு மொழிப்பாடம்  எடுத்து சுமார் 20ஆயிரத்துக்கும் அதிகமானோர்  படித்து வருகின்றனர். இவர்களுக்கு இன்னும் பாடப்புத்தங்கள் வழங்கப்படவில்லை.

அதுபோல, இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றை மொழிப்பாடமாக தேர்வு செய்து படித்து வலும் மாணவர்களுக்கும் இன்னும் புத்தங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காலாண்டு தேர்வுகள்  நெருங்கி விட்ட நிலையில் இன்னும் பாடப்புத்தங்கள் வழங்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாணவர்களும், பெற்றோர்களும் தமிழக அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், பள்ளிகள் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், தமிழக கல்விஅமைச்சர் செங்கோட்டையனோ,  தமிழக கல்வித்திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், பிளஸ்2 படித்தவுடனே வேலை பெறும் வகையில் உள்ளதாகவும் ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  உண்மை நிலவரத்தை மறைக்கவே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் புதுபுதுப் அறிவிப்புகளை வெளியிட்டு மாயாஜாலம் செய்து வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை,  தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு 9, 11ஆம் வகுப்பு மொழிப்பாடப் புத்தகம் விரைவில் வழங்கப்படும் மொழிபெயர்த்தலில் உள்ள சிக்கலால், வேற்றுமொழி பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி