இங்கிலாந்து இளவரசர் முடிவுக்கு அரசி எலிசபெத் ஒப்புதல்

ண்டன்

னி இங்கிலாந்து மற்றும் கனடாவில் வசிக்க இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி எடுத்த முடிவுக்கு அரசி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத் பேரனும் இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகனுமான ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மெக்கன் ஆகியோருக்கும்  அரச குடும்பத்துக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  இதனை வதந்தி என்று இங்கிலாந்து அரச குடும்பம் அறிவித்தது.

கடந்த புதன்கிழமை அன்று  இங்கிலாந்து அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹாரியும், அவரது மனைவி மெக்கனும் விலகுகின்றனர் என்றும் இனி வரும் காலங்களில் பிரிட்டன் மற்றும் கனடாவில் தங்களது நேரத்தைச் செலவிட இருப்பதாக ஹாரி அறிவித்தார்.  இந்த முடிவை இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நேற்று  இளவரசர் ஹாரி – மெக்கலின் முடிவு குறித்து இங்கிலாந்து ராணி ஆலோசனை நடத்தினார்.   ஆலோசனை  முடிவில் ஹாரி மற்றும் மெக்கலின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அரச குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: approved, england, leaving england, Patrikaidotcom, Price harry, Queen elezabeth, tamil news, அரசி எலிசபெத், இங்கிலாந்து, இளவரச்ர் ஹாரி, ஒப்புதல், புது முடிவு
-=-