அரச பாரம்பரியத்தை ராணி எலிசபெத் முன்பு உடைத்தெரிந்த மேகன்

இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்பு மேகன் மார்க் அரச நெறிமுறைகளை உடைத்துவிட்டதாக சமூகவளைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் உலகில் உள்ள அனைத்து இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்ல் மற்றும் பிறநாட்டு அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.
meghan
நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது ராணி எலிசபெத்துடன் பிறநாட்டு தலைவர்கள் புகைப்படம் எடுத்தனர். இதில் ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது மேகன் ”டச்சஸ் ஸ்லாண்ட் “( அரச பாரம்பரியப்படி அமருதல்) முறைப்படி அமர்வதை மறந்து ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு அமர்ந்தார். அடுத்த சில வினாடிகளில் தனது தவறை உணர்ந்த மேகன் டச்சஸ் ஸ்லாண்ட் முறைப்படி அமர்ந்தார்.

ராணி எலிசபெத் முன்னிலையில் மேகன் இப்படி நடந்து கொண்டதை கண்டித்து சமூக வளைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் மேகனை ஆதரித்து டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மே மாதம் 19ம் தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்காவின் நடிகையான மேகன் மார்க்கிற்கும் அரச முறைப்படி திருமணம் நடைபெற்றது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-