ண்டன்

ங்கிலாந்து அரசி எலிசபத் இனி காமன் வெல்த் நடுகளின் தலைவராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்பார்  என தாம் எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் இளவரசி இரண்டாம் எலிசபெத் நேற்று 53 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.   பக்கிங்ஹாம் அரண்மைனையில் இந்த விழா நடைபெற்றது.    பல வருடங்களாக காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அரசி எலிசபெத் பொறுபேறு வருகிறார்.

இளவரசர் சார்லஸ்

அவர் தனது உரையில் “எனது தந்தை 1949 ஆம் வருடம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்.   அவருக்குப் பிறகு நான் இந்த கூட்டமப்பின் தலைவராக பொறுப்பேற்று வருகிறேன்.  இந்த அமைப்பு எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக வளர வேண்டும் என விரும்புகிறேன்.   விரைவில் இதன் தலமைப் பொறுப்பை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்”  எனக் கூறினார்.

காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அரசி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக யாரை நியமிப்பது என்பது குறித்து நாளை அனைத்து தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.   இங்கிலாந்து பிரதமர்   தெரசா மே,  இளவரசர்  சார்லசுக்கு தனது ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.   மேலும் காமன்வெல்த்  நாடுகளின் பிரதிநிதிகள் பல பிரச்னைகள் குறித்து இதே கூட்டத்தில் விவாதிக்க எண்ணி உள்ளனர்.