அமேசான் தளத்தில் வெளியாகும் ‘குயின்’ ரீமேக்குகள்…..!

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘குயின்’. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை மனு குமரன் தயாரித்து வந்தார். தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘தட்ஸ் மஹாலக்‌ஷ்மி’, கன்னடத்தில் ‘பட்டர்ப்ளை’, மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்று பெயரிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், தணிக்கையில் சிக்கல் ஏற்பட்டது. படம் வெளியாகவில்லை.

தற்போது ‘குயின்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்குகளைஅமேசான் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வந்துள்ளது .