காஞ்சிபுரம்

மிழ்நாடு சர்வீஸ் கமிஷன் நடத்திய பொறியாளர் தேர்வுக்கான கேள்வித்தாட்கள் மாற்றி வழங்கப்பட்டதால் மாணவர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நேற்று பொறியியல் பணிக்கான தேர்வை நடத்தியது.   மாநிலம் எங்கும் நடைபெற்ற இந்த தேர்வில் காஞ்சிபுரம் நகரில் எஸ் எஸ் கே வி ஆண்கள் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.   இங்கு பொறியியல் பணிக்கான அனைத்து பிரிவின் மாணவர்களும் தேர்வு எழுதினர்.

அப்போது மின்னியல் (electrical engg) பாடப் பிரிவில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு மின்னணு மற்றும் தொடர்பியல் (electronics and communication engg) பாடப்பிரிவுக்கான கேள்வித் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.   இதை  தேர்வு மையத்தில் இருந்த கண்காணிப்பாளர்களிடம் மாணவர்கள் முறையிட்டும் அவர்கள் மாற்றித் தர மறுத்து விட்டனர்.

தேர்வு எழுதி முடித்து மாணவர்கள் வெளியேறிய பிறகே கேள்வித்தாட்கள் தவறாக அளிக்கப்பட்டது கண்காணிப்பாளர்களுக்கு உறுதியாக தெரிய வந்தது.   மாணவர்களும் கண்காணிப்பாளர்களும் தற்போது கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.   மாவட்ட ஆட்சியர் பொன்னையா இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.