அஸ்வினுக்கு சிறு வயதில் பயிற்சி அளித்தவர் கிரிக்கெட் அணி மேலாளராக நியமனம்!!

டில்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போதைய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சிறு வயதில் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அஸ்ஸாம், தமிழக அணிகளுக்காக 74 போட்டிகளில் விளையாடி 285 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தமிழ்நாடு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர். தேசிய கிரிக்கெட் அகடாமியின் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்.

மேலும், இவர் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 16 ஆண்டுகளாக மேலாண்மை மற்றும் நிர்வாகி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

கொழும்புவில் வரும் 3ம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நிர்வாக மேலாளராக ஓராண்டிற்கு பணியாற்றுவார் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.