ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்குப்பதிவு இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க  வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கடந்த 14ந்தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்கே.நகர் தொகுதிக்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

வரும் 21ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 148 புகார்கள் வந்துள்ள தாகவும், 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கடந்த 14ந்தேதி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க  ஆர்.கே நகரில் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை கூடுதலாக அமர்த்தவும்,  ஆர்.கே நகரில் அனைத்து தெருக்களிலும் கேமரா பொறுத்தக்கோரியும் கூறி உள்ளார். மேலும், வாக்குப்பதிவின்போது அதை நேடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ ஆர்.கே.நகரில் அனைத்து வாக்குச்சாவடி வாக்குப்பதிவும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.