ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெறும்! திருநாவுக்கரசர்

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே வெற்று பெறும். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

கோவையில் இருந்து  சென்னை வந்த திருநாவுக்கரசர்,  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக அரசு உடடினயாக மருத்துவ நுழைவுத்தேர்வான ‘ நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற உடனடியாக  உச்சநீதிமன்றத்தையும்,மத்திய அரசையும் அணுகி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

தமிழக பட்ஜெட்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த அறிவிப்பும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றுபெறும் என்றும் கூறினார்.