ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தீபாவுக்கு ‘படகு’ சின்னம்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு நடைபெற்றது.

இதில், ‘எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான  தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார்.

படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தீபா… நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் படகு மூலம் கரை சேருவாரா அல்லது அல்லது படகில் தத்தளிப்பாரா என்பது வரும் ஏப்ரல் 15ந்தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.