ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் புகார் பதிவு செய்ய தொலைபேசி எண்!

சென்னை,

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் ஆர்.கே. நகரில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

வேட்புனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலின் போது தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொது மக்கள், அரசியல் கட்சிகள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-4257012 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தேர்தல் தொடர்பான செலவினங்களை கண்காணிக்க 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2 வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Election commission announced the phone number for register the complaint!, r.k.nagar by-election, ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் அலுவலராக பத்மஜாதேவி நியமனம்!
-=-