ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை!

சென்னை,

றைந்த தமிழக முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 127 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

கடைசி நாளான நேற்றுதான் அதிமுக அணிகளான  அதிமுக (அம்மா) கட்சி யைச் சேர்ந்த டிடிவி தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியைச் சேர்ந்த மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜக வேட்பாளர் கங்கை அமரன் உட்பட 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே 2016-ல்  ஜெயலலிதா போட்டியிட்டபோது அதிகபட்சமாக  64 வேட்பு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தற்போது  127 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் முன்னிலையில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இன்று மாலை வேட்பாளர்  இறுதிப்பட்டியல் வெளியாகும்.

வேட்புமனுக்களை திருப்பப்பெற கடைசி நாள்:  27ந்தேதி.

தேர்தல் நடைபெறும் நாள்:  ஏப்ரல் 12ந்தேதி

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: ஏப்ரல் 15 ந்தேதி.

Leave a Reply

Your email address will not be published.