ஆர்.கே.நகர் தேர்தல்: பால்கனகராஜ் கட்சி ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு.

சென்னை,

டைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்க தமிழ் மாநிலக்கட்சி தலைவர் ஆர்.பால்கனகராஜ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ளது.

அதிமுகவின் பெயரும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டுள்ளதால், ஓபிஎஸ் அணிக்கு எலக்ட்ரிக்கல் போல் (இரண்டு விளக்கு உள்ள மின் கம்பம்) சின்னமும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது 62 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பால்கனகராஜ்.

பால்கனகராஜ்,  ஏற்கனவே 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.