ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருதுகணேஷ்!

மருது கணேஷ்

சென்னை,

றைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக மருதுகணேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர். அந்த பகுதி திமுக பகுதி செயலாளராக இருக்கிறார்.

திமுக வேட்பாளர் குறித்து நேற்று முன்தினம் நேர்காணல் நடைபெற்றது.. அதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

வேட்பாளர் அறிவிப்பு

ஏற்கனவே திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணத்தின் உறவினரா காமராஜரின் பேத்தி நிற்க இருப்பதாகவும், கடந்த முறை  போட்டி யிட்டு தோல்வியடைந்த சிம்லா முத்துச்சோழன் நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதியமுகமாக மருதுகணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.