“பயணங்கள் முடிவதில்லை’ படம் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய ஆர்.சுந்தரராஜன், இயக்குநர் பயணத்தை நிறுத்தி விட்டாலும், நடிகராக நிலைத்து நிற்கிறார்.

விஜயகாந்த், ‘மைக்’ மோகன் உள்ளிட்ட பலரின் உயரத்துக்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.
ஆர்.சுந்தரராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன், இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

கதாநாயகியாக நடிக்க தாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கோடம்பாக்கத்தின் முன்னணி காமெடி நடிகர்கள் பலரும் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது.

-பா.பாரதி.