கங்கை நதியில் கழிவுகளை கொட்டினாலோ ஆக்ரமித்தாலோ 100 கோடி அபராதம்

டில்லி

கங்கை நதி பல விதங்களிலும் மாசு படுவதால், அந்தக் குற்றங்களுக்கு கடும் தண்டனை சட்டத்தில் தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக மத்திய அரசு கங்கை நதி மாசுபடுவது பற்றிய ஆய்வில் மத்திய அரசின் குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.

அந்தக் குழுவில் கங்கை நதியில் கழிவுகளைக் கொட்டுவது, மணல் அள்ளுவது, ஆற்றின் குறுக்கே கட்டிடங்கள் கட்டி அதன் போக்கை தடுப்பது மற்றும் பல குற்றங்கள் கண்டறியப்பட்டு தண்டனைக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

அந்த சிபாரிசின் படி மேற்கூறிய குற்றங்கள் கடும் தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, ஆற்றின் குறுக்கே கட்டிடம் கட்டி அதன் பாதையை தடுப்பது, மணல் அள்ளுவது, மற்றும் பல குற்றங்களுக்கு, திருட்டு, மோசடி போன்ற குற்றங்களுக்கான தண்டனை விதிக்கப்படும்.

இந்த கங்கையை மாசு படுத்தும் குற்றங்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும் அதனுடன் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

தண்டனைகள் விவரம் வருமாறு:

கங்கை நீர் பாய்வதை தடுத்தால், 2 முதல் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கங்கையின் ஓடு பாதையில் கட்டிடம் கட்டினால் 50 கோடி ரூ[பாய் வரை அபராதமும் ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்படும்

கழிவுகளைக் கொட்டினாலோ, கழிவு நீரைக் கலந்தாலோ ஒராண்டு சிறை தண்டனையும், ரூ 50000 அபரதமும் விதிக்கப்படும்.

You may have missed