‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி சுமார் 7 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இராவண கோட்டம்’.

கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தெரிகிறது. இதனிடையே ‘மாஸ்டர்’, ‘வானம் கொட்டட்டும்’, உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்தார் ஷாந்தனு.

இதனிடையே ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘இராவண கோட்டம்’ படம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்தார்கள். அதன்படி, தற்போது ‘இராவண கோட்டம்’ படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதோடு, “இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்” என்று சாந்தனுவையும் வாழ்த்தியுள்ளார்.