ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரில், மொத்தம் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெல்லி அணியின் காசிகோ ரபாடா பர்பிள் தொப்பியை வென்றார்.

மொத்தம் 17 போட்டிகளில் ஆடிய இவர் இந்த சாதனையை செய்தார். இறுதிப்போட்டியில் இவருக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது.

இவருக்கு அடுத்து மும்பை அணியின் பும்ரா, மொத்தம் 15 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதிப்போட்டியில் இவர் ஒரு விக்கெட்கூட எடுக்கவில்லை.

மூன்றாவது இடத்தில் இருப்பவர், அதே மும்பை அணியின் டிரென்ட் பெளல்ட். இவர் 15 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெல்லி அணியின் நார்ட்ஜே 16 போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுக‍ையும், பெங்களூரு அணியின் சாஹல் 15 போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுகையும் கைப்பற்றியுள்ளனர்.