அதிக வித்தியாசம் – தற்போதைய கிங் காகிசோ ரபாடாதான்!

துபாய்: தற்போது நடைபெற்று வரும் 13வது ஐபிஎல் தொடரில், தற்போதைய நிலவரப்படி மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்த பவுலர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் டெல்லி அணியின் ரபாடா.

மொத்தம் 7 போட்டிகளில் ஆடி, 7.69 எகனாமியுடன் 17 விக்கெட் சாய்த்துள்ளார் அவர். இவருக்கடுத்து 7.92 எகனாமியுடன் 11 விக்கெட் சாய்த்து இரண்டாமிடத்தில் உள்ளவர் மும்பை அணியின் பும்ரா.

முதலிடத்திற்கும், இரண்டாமிடத்திற்கும் மொத்தம் 6 விக்கெட்டுகள் வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியின் பெளல்ட் 8.01 எகனாமியுடன் 11 விக்கெட் சாய்த்து அதே இரண்டாமிடத்தில் உள்ளார்.

பஞ்சாப் அணியின் முகமது ஷமி, ஐதராபாத் அணியின் ரஷித் கான் மற்றும் பெங்களூரு அணியின் யஸ்வேந்திர சஹல் ஆகியோர் தலா 10 விக்கெட் கைப்பற்றி நான்காமிடத்தில் உள்ளனர்.