பாட்னா

பிகார் மாநில சட்டப்பேரவையின் மேலவை எதிர்க்கட்சித் தலைவராக ராப்ரி தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநில சட்டப்பேரவை இரு அவைகளாக செயல்பட்டு வருகிறது.   இதில் மேலவையில் 71 உறுப்பினர்கள் உள்ளனர்.   இதில் எதிர்க்கட்சி தலைவராக ஒரு கட்சிக்கு குறைந்தது 9 பேர் தேவை ஆகும். சென்ற வருடம் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 7 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.   அதனால் கடந்த வருடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை மேலவை தேர்தலில் முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வ்ர் சுஷில்குமார் மோடி,  முன்னாள் முதல்வர் லாலுவின் மனைவி ராப்ரி தேவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   இதை ஒட்டி ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.   அதனால் ராஷ்டிர்ய ஜனதா தளம் கட்சியின் கோரிக்கையை ஏற்று ராப்ரி தேவியை எதிர்க்கட்சி தலைவராக அரசு நியமித்துள்ளது.