மும்பை: கருப்பினத்திற்கு எதிரான பாகுபாடு, கால்பந்து மட்டுமின்றி, கிரிக்கெட் உள்ளிட்ட பலவற்றிலும் தொடர்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில்.

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு, காவல்துறை தாக்குதலில் கொல்லப்பட்டது அந்நாட்டில் பெரிய பிரச்சினையைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில், அதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிறிஸ் கெயில் கூறியதாவது;

“நான் உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளேன். நிறவெறி தொடர்பான பிரச்சினைகளையும் பல இடங்களில் சந்தித்துள்ளேன். நான் உண்மையாகவே சொல்கிறேன். நிறவெறிப் பிரச்சினை இன்னும் பல இடங்களில் தொடரத்தான் செய்கிறது.

இந்த நிறவெறி வேறுபாடு கிரிக்கெட்டிலும் இருக்கவே செய்கிறது. ஒரு அணிக்கு உள்ளேயே பாகுபாடு பார்க்கப்படுகிறது. நானும் கருப்பினத்தைச் சேர்ந்தவன்தான். கருப்பு என்பது சக்தி வாய்ந்தது. கருப்பராக இருப்பதில் பெருமையடைகிறேன்” என்றார் கெயில்.