டெல்லி:

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட  விதிக்கப்பட்ட தடையை வரும் 29ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அன்றைய தினம் வழக்கின் இறுதி விசாரணை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.  இந்த வெற்றி முறைகேடு மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளதாக, இன்பதுரையை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உறுப்பினர் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த   சென்னை உயர் நீதிமன்றம், கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டு, எண்ணியது.

ஆனால், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து,  அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த  மேல்முறையீடு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், வாக்கு எண்ணிக்கையை வெளியிட 22ந்தேதி தடை விதித்தது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,  மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை வரும் 29-ம் தேதி வரை  நீடித்தும், அன்றைய தினம் வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும்  தெரிவித்து உள்ளது.