நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராதாரவி…!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்”. என கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள். .

அதை தொடர்ந்து, திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாரவி, கொலையுதிர் காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், தன்னுடைய கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதால நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக-வில் இருந்து நானே விலகி விடுகிறேன் என்று ராதாரவி தெரிவித்தார்.