சல்மான் கானின் ’ராதே’ திரைப்பட படப்பிடிப்பு தொடக்கம்…!

சல்மான் கான் – பிரபுதேவா இணையும் புதிய படத்துக்கு ‘ராதே’ என பெயரிடப்பட்டுள்ளது.. மேலும், இந்த படம் 2020-ம் ஆண்டு பக்ரீத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகவுள்ளது. இதன் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில் ராதே படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.’ராதே’படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பயணம் தொடங்கியது” என்று பட குழுவின் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி