‘ராதே ஷ்யாம்’ படத்தில் இணைந்த நடிகர் ஜெயராம்…..!

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராதே ஷ்யாம்’ .

‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷ்யாம்’ வெளியாகவுள்ளது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே ‘ராதே ஷ்யாம்’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இத்தாலியில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதெராபாத்தில் விரைவில் தொடங்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபாஸுடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ராதே ஷ்யாம் படத்தில் நடிப்பதாக பிரபல நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட அல்லு அர்ஜுனின் Alavaikunthapuramuloo படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.