பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராதே ஷ்யாம்’ படத்தின் பட்டையை கிளப்பும் மோஷன் போஸ்டர்…..!

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராதே ஷ்யாம்’ .

‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷ்யாம்’ வெளியாகவுள்ளது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே ‘ராதே ஷ்யாம்’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.பிரம்மாண்டமான இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.