ட்விட்டர் தளத்தில் சாதனை புரிந்த பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ஃபர்ஸ்ட் லுக்…..!

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராதே ஷ்யாம்’ .

‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டது படக்குழு.

ட்விட்டர் தளத்தில் உலகளவில் ட்ரெண்ட்டானது. சுமார் 24 மணி நேரத்தில் 6.3 மில்லியன் ட்வீட்கள், #RadheShyam ஹேஷ்டேக்கில் வெளியிட்டுள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.