ராதிகா ஆப்தே இயக்கிய ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது….!

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார்.

சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவையா நடித்திருந்த இந்தப் படம் தூக்கத்தில் நடக்கும் பிரச்சினையைப் பற்றியது.

இந்நிலையில், சர்வதேச அளவில் கொரோனா ஊரடங்கால்,பல திரைப்பட விழாக்கள் இணையத்திலேயே நடைபெறுகின்றன. அப்படி குறும்படங்களுக்கென நடந்த பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் ‘சிறந்த நள்ளிரவுக் குறும்படம்’ என்ற விருதை ராதிகா ஆப்தேவின் குறும்படம் வென்றுள்ளது.

“விழா நடுவர்களுக்கு நன்றி. சிறந்த நள்ளிரவுக் குறும்படம் என்ற விருதை வென்றதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ராதிகா ஆப்தே.