விஷால் வேட்பு மனு : ராதிகா ட்விட்டரில் பரிகாசம்

சென்னை

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு நிராகரிப்புக்கு ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேலிக் கருத்து பதிந்துள்ளார்.

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலால் அரசியல் களத்தில் கடும் பரப்பரப்பு உண்டாகியது போல் திரையுலகிலும் பரபரப்பு உண்டானது.   நடிகர் விஷால்  போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து சேரன் உள்ளிருப்பு போராட்டம் நிகழ்த்தினார்.   அவருக்கு ராதாரவி,  ராதிகா சரத்குமார் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர்.   ஆனால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.    அவர் பெயரை முன்மொழிந்த இருவரின் கையெழுத்து தவறானது என காரணம் கூறப்பட்டது.

இந்நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் பரிகாசம் செய்துள்ளார்.  அவர் தனது பதிவில் “மக்களுக்காக உழைப்பதாகவும் ஊழலை எதிர்ப்பதாகவும் சொன்ன பச்சோந்தியின் உண்மையான வண்ணம் மக்களுக்கு தெரிந்துள்ளது.   கையெழுத்தில் மோசடி என்பதில் இருந்து அந்த பச்சோந்தியின் உண்மை நிறம் வெளிபட்டுள்ளது” என பதிந்துள்ளார்.