நிர்பயாவிற்கு நீதி கிடைத்துவிட்டது : ராதிகா சரத்குமார்

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக ராதிகா சரத்குமார் கூறியிருப்பதாவது :-

நீதி கிடைத்துவிட்டது. நமது மகன்களைப் பெண்களை மதிக்குமாறு வளர்க்க இது பலருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.