ஷூட்டிங் செல்லுங்கள் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லவில்லை : ராதிகா

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள்தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இதனிடையே, மே 5-ம் தேதி படப்பிடிப்புக்குச் சென்று, மே 11-ம் தேதியிலிருந்து எபிசோட்கள் வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே தொலைக்காட்சி நிறுவனங்கள் படப்பிடிப்புக்குச் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. படப்பிடிப்புக்குச் செல்வதற்குக் கதையை எல்லாம் தயார் செய்து, தயாராக இருங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

கோடம்பாக்கம் ஹாட் ஸ்பாட்டில் இருக்கிறது.ஒரு தருணத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்குத் தகுந்தாற் போல்தான் நாமும் வேலை செய்ய முடியும். அதை மனதில் வைத்துச் செயல்படுவோம். எப்படித் திட்டமிட்டுப் பணிபுரியலாம் என்பதைப் பார்க்க வேண்டும். முக்கியமாக ஷூட்டிங் செல்லுங்கள் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லவில்லை. அவர்கள் அதற்குத் தயாராக இருங்கள் என்றே சொன்னார்கள்” என ராதிகா விளக்கமளித்துள்ளார் .