தீபக் சுந்தர்ராஜன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்த ராதிகா சரத்குமார்….!

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு இன்று செப்டம்பர் 2 ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்து வருகிறார்.

முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் யோகி பாபு.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடக்கும் இதன் ஷூட்டிங்கில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் இணைந்தார். அந்த படப்பிடிப்பில் எடுத்த, சில புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாங்கள் பணியாற்றுகிறோம் என்று கேப்ஷன் தந்துள்ளார்.