ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டில்லி:

ஃபேல் போர் விமானம் முறைகேடு தொடர்பான உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான  யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி. சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷன் ஆகியோர்  உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்ததில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித முறை கேடு நடைபெற்றதாக தெரியவில்லை என்றும்,  இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்சோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் அனைத்தும் மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக   அதில் தான் ஒப்பந்தங்களின் முக்கிய சாரம்சம் இருப்பதாகவும் ஆடியோ செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அந்த ஆவணங்களை இதுவரை வெளியிடாமல் மத்திய அரசு மறைத்து வைத்திருப்பது ஏன் என்றும்  கேள்வி எழுப்பியுள்ளது.