அனில் அம்பானிக்கு ஆதரவாக ரபேல் ஒப்பந்தம்….பிரான்ஸ் முன்னாள் அதிபர்

டில்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்திய அரசு அனில் அம்பானிக்கு ஆதரவாக இருந்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.

‘‘பிரான்ஸ் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் அனில் அம்பானியை பங்குதாரராக சேர்க்க இந்திய அரசு கேட்டுக்கொண்டது’’ என்று பிரான்கோயிஸ் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க பிரான்ஸ் தூதரகம் மறுத்துவிட்டது.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் வகை போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கவும், பழுது நீக்கவும், ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார். ரபேல் ஒப்பந்தம் குறித்து பேசுவதை ராகுல் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று அனில் அம்பானி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி