பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்…ரஃபெல் நடால் சாம்பியன்

பாரீஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் தற்போதைய சாம்பியன் ரஃபெல் நடாலும் (ஸ்பெயின்), டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதினர். இதில் நடால் 6-:4, 6:-3, 6:-2 என்ற நேர் செட்களில் டொமினிக் திம்மை வீழ்த்தி 11வது சாம்பியன் பட்டம் வென்றார்.

11 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 2வது நபர் என்ற சிறப்பை நடால் பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்றுள்ளார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 17-வது பட்டத்தை நாடல் வென்று சாதனை படைத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rafael Nadal clinches 11th French Open title with straight sets win over Dominic Thiem, பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்...ரஃபெல் நடால் சாம்பியன்
-=-