ர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயினின் ரபேல் நடால் மீண்டும் முதலிடத்துக்கு வந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜான் ஐஸ்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ் ஆகியோர் விளையாடினர்.

இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆறுக்கு ஏழு, ஆறுக்கு நான்கு, ஆறுக்கு நான்கு என்கிற செட் கணக்கில் ஜான் ஐஸ்னர் வெற்றிபெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த வந்த  சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியுற்றதை தொடர்ந்து, ரபேல் நடால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதுபோல, மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில்  பட்டம் வென்ற ஜான் இஸ்னர் 9-வது இடத்துக்கு 2-வது முறையாக முன்னேறியுள்ளார்.

இஸ்னரிடம் தோற்ற அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். காலிறுதி வரை வந்த தென் கொரியாவின் ஹியோன் சங், முதல் முறையாக 19-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் தரவரிசையில் மியாமி ஓபன் மகளிர் பிரிவில் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், முதல் முறையாக 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ருமேனியாவின் சைமோனா ஹேலப் முதலிடத்தில் தொடர, செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 10-வது இடத்திலும், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 11-வது இடத்திலும், ரஷியாவின் டரியா கசாட்கினா 12-வது இடத்திலும் வந்துள்ளனர்.