ரஃபேல் ஒப்பந்த முறைகேடு: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் (வீடியோ)

டில்லி:

ஃபேல்  விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக தினசரி புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முன்னாள் மத்திய அமைச்சர் கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்துகொண்டு, பாஜக அரசுக்கு எதிராக காகிதங்களால் தயாரிக்கப்பட்ட விமானங்களை ஏந்தி கோஷமிட்டனர்.

அவர்கள் பறக்க விட்ட பேப்பர் விமானத்தின் ஒருபுரம் பிரதமர் மோடியும், மற்றொரு புறம் அனில் அம்பானியின் படமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.