டில்லி:

ஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட மோடி தலைமையிலான அரசு 2.86% குறைவான விலையில் ரஃபேல் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், ஆனால்,  ரஃபேல் விமானத்தில் இந்தியா சார்பில் கோரப்பட்டிருந்த கூடுதல் வசதிகள் காரணமாகவே விலை அதிகரித்து இருப்பதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல்  போர்  விமானங்கள் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என  விலை நிர்ணயிக்கப்பட்டது. . அதன்பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பாஜக அரியணையில் ஏறியது. அதையடுத்து, பாஜக ஆட்சியில் அதே ரஃபேல் விமானத்தின் விலை 1,640 கோடி ரூபாய் என்று விலை பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அனில் அம்பானியின் நிறுவனம் பெரும் லாபம் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ரஃபேல் விமானங்களை வாங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.  ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ரஃபேல் விமானங்கள் ஒப்பந்தம் குறித்துமத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தார். இந்த தணிக்கை செய்யப்பட்ட 141 பக்க அறிக்கை நாடாளு மன்ற மாநிலங்களவையுல் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  ,’காங்கிரஸ் ஆட்சிக்கால ஒப்பந்தத்தை விட பாஜக ஆட்சியில் ரபேல் விலை 2.86% குறைந்துள்ளது. அமைச்சர்கள் கூறுவதுபோல் விமான விலை 9% குறைக்கப்படவில்லை. இந்தியா கோரி இருந்த கூடுதல் வசதிகளால் தான் ரஃபேல் விமான விலை அதிகரித்துள்ளது ‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் முதல் பாகமான  விமான கொள் முதல் என்ற பெயரின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் உட்பட இந்தியா விமானப்படைக்காக செய்யப்பட்ட 11 ஒப்பந்தங்கள்  மற்றும்  10 வெவ்வேறு விமான கொள்முதல்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சிஏஜி அறிக்கையில் 2வது பாகத்தில், ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து விவரிக்கப்பட்டு உள்ளது. இதில்  கொள்முதல் பேரம் தொடங்கி ஒப்பந்தம் முடிந்த வரை செய்யப்பட்ட நடை முறைகள் எல்லாம் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

ரபேல் ஒப்பந்தம் சென்ற ஆட்சியை  2.86% குறைவான விலையில் ரபேல் ஒப்பந்தம் பாஜக ஆட்சியில் போடப்பட்டுள்ளது. பாஜக அரசு செய்த ஒப்பந்தம் குறைவான விலையில் செய்யப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த அறிக்கையில்,  ரபேல் விமானத்தின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றும், ரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் பங்கு குறித்தும் தெரிவிக்கப்பட வில்லை என தெரிகிறது.

ஏற்கனவே மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ரிலையன்ஸ் குறித்தோ, விமான விலை விவரம் குறித்தோ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.