டில்லி:

ஃபேல் மேல்முறையீடு வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வில் கடந்த விசாரணையை தொடர்ந்து, 10ந்தேதிக்கு விசாரணையை உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்தது.

அதையடுத்து வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்ந்த மனுதாரரான  பிரஷாந்த் பூஷண்  மேலும் ஒரு  புதிய நினைவூட்டல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தோம். ஆனால், இந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்யக் கோருவதுபோல், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசு, பல தகவல்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளது. தற்போது, பல உண்மைகள் வெளிவந்துள்ளன. அதனால், இந்த வழக்கில் அளித்து உள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.