ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம்! தேர்தல்ஆணையர் அசோக் லவசா

--

சென்னை:

ஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம் என்று செய்தியாளர்களிடம் தேர்தல்ஆணையர் அசோக் லவசா தெரிவித்தார்.

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஃபேல் ஒப்பந்த ஊழல் முறைகேடு தொடர்பாக, விஜயன் என்பவர் எழுதியிருந்த புத்தகம் கடந்த 2ந்தேதி மாலை, இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் வாயிலாக வெளியிடப்பட இருந்தது. ஆனால்,  புத்ததக வெளியீட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்த தேர்தல் பறக்கும் படையினர்,  200க்கும் மேற்பட்ட புத்தகப் பிரதிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை உடனே திருப்பி கொடுக்கும்படியும் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், இந்திய தேர்தல்ஆணையர்களிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்அளித்த தேர்தல் ஆணையர் லவசா,

“இந்த சம்பவம் ஊடகங்கள் மூலமே எங்களது கவனத்துக்கு வந்தது. .இ துகுறித்து தேர்தல் ஆணையரும் அறிந்துகொண்டார். அதைத்தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரஃபேர் புத்தகம் வெளியிடுவதை தடை செய்வது குறித்த தலைமை தேர்தல் ஆணையரோ, தேர்தல் ஆணையமோ அங்கீகரிக்ககவில்லை என்றவர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி, காவல்அதிகாரிகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.