ரஃபேல் விமான விலையை முன்பை விட 40% உயர்த்திய நிறுவனம் : ஆங்கில பத்திரிகை

டில்லி

ஃபேல் விமான விலையை முன்பு ஒப்புக் கொண்டதை விட டசால்ட் நிறுவனம் 40% உயர்த்தி உள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்காக 36 ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் இட்டது. அந்த் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்தே அதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது. முந்தைய காங்கிரஸ் அரசு குறிப்பிட்டிருந்த விலையை விட பாஜக அரசு அதிக விலை கொடுத்து வாங்க உள்ளதால் அதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால் பாஜக அரசு அதை மறுத்தது. இருப்பினும் அந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை பாதுகாப்புக் காரணம் குறித்து வெளியிட முடியாது என அரசு அறிவித்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த விமானத்தின் தொழில் நுட்பம் மட்டுமே பாதுகாப்பு ரகசியம் என்பதால் அதை வெளியிடாமல் விலை பற்றி வெளியிடலாம் என கூறியதை அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில் அந்த ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணைகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ள நிலையில் ஒரு பத்திரிகை அந்த விலை குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆங்கிலத்தில் பிரபலமான பொருளாதாரப் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

அந்த செய்தியில், “கடந்த 2012 ஆம் ஆண்டு டசால்ட் நிறுவனம் ரஃபேல் விமானத்துக்கு அறிவித்த விலையை விட 40% அதிகமான விலைக்கு வாங்க 2016ல் இந்திய அரசு ஒப்ப்பந்தம் இட்டுள்ளது. கடந்த 2012 ஆம் வருடத்தில் இருந்து இந்த விவகாரத்தை கவனித்து வந்த இரு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  எங்கள் பத்திரிகைக்கு இந்த் தகவலை அளித்துள்ளனர்,  அதன்படி தற்போதுவிலை 40% அதிகரித்துள்ளது.  அல்லது அதிகரித்து காட்டப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளது..